தேர்தலில் தோல்வியடைந்த எந்தவொரு வேட்பாளருக்கும் தேசியப்பட்டியல் ஊடாக நியமனம் வழங்கப்படமாட்டாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் அது தொடர்பில் பரீசிலிக்கப்படும் எனவும், சிறிகொத்தவை பலவந்தமாக கைப்பற்றும் எண்ணம் எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.
பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இன்று சஜித் பிரேமதாச ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். இதன்போது தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.