நடை பயிற்சியில் ஈடுபட்ட பெண்ணின் 4 பவுண் நகையை களவாடியவர் கைது!

வவுனியா நகரசபை மைதானத்தில் நடைப் பயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடைப் பயிற்சிக்காகக் கடந்த சில நாள்களாக வவுனியா நகர சபை மைதானத்துக்கு வந்து சென்றுள்ளார். வழமை போன்று நேற்றுமுன்தினம் மாலையும் நகர சபைக்கு அவர் வந்துள்ளார். இதன்போது தான் அணிந்திருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட 4 பவுண் தங்க ஆபரணங்களை நகர சபை வளாகத்தில் உள்ள மோட்டடார் சைக்கிள் தரிப்பிடத்தில் நிறுத் தப்பட்ட தனது மோட்டார் சைக்கிள் இருக்கைக்குள் வைத்து பூட்டி விட்டு நடைப் பயிற்சிக்குச் சென்றுள்ளார்.

நடைப் பயிற்சி முடிந்த பின்னர் தனது மோட்டார் சைக் கிளை எடுப்பதற்காக அந்தப் பெண் வந்தபோது அவரது மோட்டார் சைக்கிள் இருக்கை உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவில் நேற்றுமுன்தினம் இரவு முறைப்பாடு செய்தி ருந்தார்.

முறைப்பாட்டையடுத்து தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் வழிகாட்டலில், குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஜயத்திலக தலைமையில் பொலிஸ் சார்ஜன் திஸாநாயக்க, பொலிஸ் கான்ஸ்டபிள்க ளான உபாலி, தயாளன், ரணில் ஆகியோர் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, மேற்படி சம்பவம் தொடர்பில் வவுனியா, பம்பைமடுப் பகுதியைச் சேர்ந்த 32 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது திருடப்பட்ட ஆறரை இலட்சம் ரூபா பெறுமதியான 4 பவுண் நகைகளும் அவரின் உடமையில் இருந்து மீட்கப் பட்டன. திருட்டுச் சம்பவத்தின்போது சந்தேகநபர் தப்பிச் செல்லப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸா ரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார் என்று வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles