பதுளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பதுளையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு, முன்பாக வைத்தே 46 வயது நபரொருவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பணக்கொடுக்கல் வாங்கலே கொலைக்கான காரணம் என பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கிய 38 வயதுடைய சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ராமு தனராஜா