சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு 8 ஆம் திகதி மாலை நடைபெறவுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரித்து வாக்களிக்கவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்த்து வாக்களிக்கும் என தெரியவருகின்றது. சிலவேளை நடுநிலைகூட வகிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.










