சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று (8) அறிவித்தது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, இவ்வாறு கூறினார்.
அத்துடன், நாட்டில் மருத்துவ மாபியாவொன்று உள்ளது, அதற்கு முடிவு கட்ட வேண்டும், அதற்கு அமைச்சரவை மாற்றுவது தீர்வு அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
