நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிக்கப்பட்டது ஏன்?

 

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரிப்பதற்கு ஏதுவாக அமைந்த காரணங்களை சபைக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகரிடம் இன்று கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சஜித்,

” அருண ஜயசேகர பிரதி அமைச்சர் தொடர்பில் எமக்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சினைகளும் இல்லை. அவர் தற்போது பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றைக் கொண்டு வந்ததன் பிற்பாடு, அதனை நிராகரிப்பதற்கு அடிப்படையாக இருந்த செயலாளர்கள் குழாமின் அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை உள்ளிட்ட ஏனைய விடயங்களை இந்த சபைக்கு சமர்ப்பிக்குமாறு கோருகின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles