நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில் கூடிய நாடாளுமன்றஅலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கு அமைய நவம்பர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியினரால் கையளிக்கப்படவிருக்கும் மீள்திருத்தப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
50 குற்றச்சாட்டுகளுடன் சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அண்மையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
