அரச மரம் முறிந்து விழுந்து களுத்துறையில் 5 லயன் அறைகள் முற்றாக சேதம்!

களுத்துறை மாவட்டம், தொடங்கொட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெபுவளை விஸ்கிலன் பிரிவின் அரபொலகந்தை பகுதியில், 21 லயன் அறைகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பின் மீது பாரிய அரசமரமொன்று முறிந்து வீழ்ந்ததில், ஐந்து லயன் அறைகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

இந்த அனர்த்தத்தினால் குறித்த லயன் குடியிருப்பின் கூரைகள் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன், அங்கு வசித்து வந்த 21 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் தற்காலிகமாகக் குழந்தை பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய குடும்பங்கள் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளிலேயே தொடர்ந்து வசித்து வருகின்றனர்.

முறிந்து வீழ்ந்த அரசமரத்தை வெட்டி அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருவதால், தமக்குப் பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல் – P.S மகேந்திரன்

Related Articles

Latest Articles