நம்பிக்கையில்லாப் பிரேணை நிராகரிக்கப்படும் சாத்தியம்!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஹருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சட்ட சிக்கலை நிலைமையை அடிப்படையாகக்கொண்டே இது பற்றி நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும், பிரேரணை தொடர்பில் சட்டமா அதிபரிடம் சபாநாயகர் அலுவலகம் சட்ட விளக்கம் கோரியுள்ளது எனவும் தெரியவருகின்றது.

இதனால் நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

அருண ஜயசேகர பிரதி அமைச்சராக பதவி வகிக்காத காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முடியுமா என ஆளுங்கட்சி தரப்பில் கேள்வி எழுப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை வரலாற்றில் பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக இதற்கு முன்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவில்லை எனவும், பிரதி அமைச்சர் என்பவர் அமைச்சரவை கூட்டு பொறுப்பு அற்றவர் எனவும் ஆளுங்கட்சி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி வெளிநாடு செல்லும்பட்சத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரதி அமைச்சரே செயற்படுகின்றார். எனவே, பிரேரணை கொண்டுவர முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது இது பற்றி சபாநாயகர் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles