நல்லதண்ணி பகுதிகளில் வீதிகளில் நடமாடும் காட்டு பன்றிகள் – மக்கள் அவதி!

நல்லதண்ணி நகரிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள், குடியிருப்பாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக கூறுகின்றனர்.

இந்த காட்டு பன்றிகள் இரவு , பகல் வேளைகளில் உணவு தேடி நகரிலும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வருவதாக இங்கு குடியிருக்கும் மக்கள் மிகவும் பீதியில் உள்ளனர்.

சிவனடிபாதமலை பகுதியில் உள்ள வன பகுதியில் அதிகமாக காட்டு பன்றிகள் உள்ளன.

இப் பகுதியில் உள்ள பன்றிகளே அங்கு உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் நல்லதண்ணி நகரில் நடமாடுகிறன.

இவ்வாறான நிலையில் வன பாதுகாப்பு அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நல்லதண்ணி நகர மக்கள் கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மஸ்கெலியா நிருபர் – செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles