” இனவாதத்தை ஒடுக்கும் முயற்சியானது நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கு வதற்கு இடமளிப்பதாக அமையக்கூடாது.” – என்று வலியுறுத்தியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் இனவாதம் பற்றி கதைக்கப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கமும் இப்படிதான் ஆட்சிக்கு வந்தது. அன்றும் இனவாதம் பற்றி கதைத்தனர். இறுதியில் தீவிரவாதத்தில்போய்தான் முடிந்தது.
இனவாதத்துக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். அரசியல் கட்சிகளில் பல்வேறுபட்ட கருத்துகளை கொண்ட நபர்கள் இருக்கலாம். ஆனாலும் எம்முள் இனவாத அரசியல் கிடையாது.
இனவாதத்தை ஒடுக்கும் முயற்சியால் தீவிரவாதம் தலைதூக்க இடமளித்துவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். இனவாதத்தை ஒழிக்க இணைந்து செயற்படுவோம். அரசியலில் இருந்து அதனை முற்றாக ஓரங்கட்டுவோம்.
அந்த நடவடிக்கை தீவிரவாதம் தலைதூக்குவதற்கு வழிவகுத்துவிடக்கூடாது. இனவாதம் மற்றும் தீவிரவாதம் என்பது இருவேறுபட்ட விடயங்கள். இரண்டையும் ஒன்றாக பார்க்க்கூடாது.” – என்றார்.
