” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.
‘ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி காலத்தில் ஊழல் ஒழிப்பு பிரிவில் ஜே.வி.பியின் அங்கம் வகித்தனர். அலரிமாளிகையில் தங்கி இருந்தனர். எனவே, நல்லாட்சியில் இடம்பெற்ற பாவச் சம்பவங்களுக்கு இந்த அரசாங்கமும் பொறுப்பு கூறவேண்டும்.
நல்லாட்சி காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ஆகியன தொடர்பிலும் ஜே.வி.பியினர் பொறுப்பு கூறவேண்டும்.
ஜே.வி.பியின் தேசியப் பட்டியல் உறுப்பினரின் இரு மகன்மார் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினர். புலனாய்வு அறிக்கையை தவறவிட்ட அதிகாரிகள் இந்த ஆட்சியில் உயர் பதவியில் இருக்கின்றனர். இவற்றை அரசாங்கம் மூடிமறைத்துவருகின்றது.” – என நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.
