” 2015 முதல் 2019 வரைதான் மலையகத்தின் பொற்காலம் என்று கூறலாம். காரணம் அந்த காலப்பகுதியில்தான் உரிமை சம்பந்தமான பல விடயங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான உதயகுமார் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் காணியுரிமை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் அது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திகாம்பரம், நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக நாலரை வருடம் இருந்தபோது தான் காணியுரிமை வீட்டு உரிமை ஆகியன பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்
அதில் இன்று தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் அதில் உறுப்பினராக வந்திருக்கின்றார்கள். ஆகவே உரிமையும், அபிவிருத்தியும் ஒன்றாக பெற்றுக்கொடுத்தது கடந்த நல்லாட்சி காலத்தில்தான் என்றும் குறிப்பிட்டார்.
கொட்டகலை கிரேக்லி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்
