நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்றம் இன்று

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

மகோற்சவத்துக்கு முதல் நாளான நேற்று கொடிச்சீலை கையளிக்கும் பாரம்பரிய நிகழ்வு இடம்பெற்றது.

கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபினரின் இல்லத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று பாரம்பரிய முறைப்படி கல்வியங்காடு வேல் மடம் ஆலயத்துக்கு கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது.

அங்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் கொடிச்சீலை சிறிய ரதத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

இன்று காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள மஹோற்சவம் எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள தீர்த்தத் திருவிழா வரையான 25 நாள்களுக்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

மகோற்சவ காலத்தில் ஆகஸ்ட் 30 ஆம் திகதி, புதன்கிழமை மாலை 4:45 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், செப்டெம்பர் 04ஆம் திங்கட்கிழமை திகதி இரவு 7:00 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4:45 மணிக்குக் கார்திகை உற்சவமும், 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, காலை 06:45 மணிக்கு சூர்யோற்சவமும், 09 ஆம் திகதி சனிக்கிழமை காலை 06:45 மணிக்கு சந்தான கோபாலர் உற்சவமும், அன்று மாலை மாலை 4:45 மணிக்குக் கைலாச வாகனமும் இடம்பெறவுள்ளன.

செப்டெம்பர் 10 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 06:45 மணிக்கு கஜாவல்லி – மஹாவல்லி உற்சவமும், மாலை 4:45 மணிக்கு வேல் விமானமும், 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 06:45 மணிக்கு மாழ்பழத் திருவிழா எனப்படும் தெண்டாயுதபாணி உற்சவமும், மாலை 4:45 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4:45 மணிக்கு சப்பறத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

செப்டெம்பர் 13 திகதி, புதன்கிழமை காலை தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது. அன்று காலை 06:15 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து ஆறுமுகப்பெருமான் சித்திரத் தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.

செப்டெம்பர் 14 திகதி, வியாழக்கிழமை காலை 06:15 மணிக்குத் தீர்தோற்சவமும், 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மாலை 4:45 மணிக்கு பூங்காவன உற்சவமும் 16 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4:45 மணிக்கு வைரவர் சாந்தியும் நடைபெறவுள்ளன.

மகோற்சவகால ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச செயலகம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உற்சவ காலத்தையொட்டி நேற்று முதல் எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரை ஆலயத்தை சூழவுள்ள யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, அரசடி வீதி, கோவில் வீதி, செட்டித்தெரு வீதி ஆகிய வீதிகளின் ஊடான வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்கான மாற்று ஏற்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

உற்சவ காலத்தில் ஆலயச் சுற்றாடலில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கண்காணிப்புக்குப் பொலீஸாரின் உதவி பெறப்பட்டுள்ளதுடன், சுகாதாரம், நீர் விநயோகம், சுத்திகரிப்புப் பணிகள் யாழ்ப்பாணம் மாநகர சபையால் மேற்கொள்ளப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles