நல்லூர் திருவிழாவில் 30 பவுண் தங்கம் கொள்ளை!

யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் உற்சவத்தில் மாத்திரம் 30 பவுண் நகை திருடப்பட்டுள்ளன என்று முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒரு சிறுவன் மற்றும் 4 பெண்கள் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளின் பின்னர் நல்லூர் கந்தனின் தேர்ப் பவனி நேற்று இடம்பெற்றது. இதனால் அதிகளவான பக்தர்கள் ஆலயத்துக்கு வருகை தந்திருந்தனர். சன நெரிசலை சாதகமாக்கிய திருடர்கள் தங்கள் கைங்கரியத்தைக் காட்டினர். 2 தாலிக் கொடி மற்றும் சங்கிலிகள் உள்பட 30 பவுண் நகைகள் களவாடப்பட்டன என்று நல்லூர் உற்சவகால பொலிஸ் காவலரணில் 7 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நீர்கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவர் சங்கிலி அறுக்க முற்பட்டபோது கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நீர்கொழும்பைச் சேர்ந்த மேலும் 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கையின்போது கோப்பாயைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவனும் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles