‘நாகினி ஆட்டம்போட்ட வங்கப்புலிகளுக்கு பாடம் புகட்டின சிங்கங்கள்’

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ரி – 20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

உலகக்கிண்ண ரி -20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 172 என்ற வெற்றியில்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அசலங்க மற்றும் பானுக ராஜபக்ச ஆகியோர் அரைத்தசமடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணி இரசிகர்கள், பங்களாதேஷ் அணிமீதும் ஆதரவு வைத்திருந்தனர். எனினும், ஒரு நாள் அவர்கள் ஆடிய நாகினி ஆட்டத்தையடுத்து, அவ்வணியையும் இலங்கை அணி இரசிகர்கள், எதிரியாகவே பார்க்க தொடங்கினர்.

Related Articles

Latest Articles