நாகினிகளுக்கு பாடம் புகட்டியது இலங்கை அணி!

பங்களாதேஷூக்கு எதிரான சர்வதேச T20 கிரிக்கெட் தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இன்று (09) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் 28 ஓட்டங்களால் வெற்றியீட்டியதையடுத்து இலங்கை தொடரை கைப்பற்றியது.

சில்ஹெட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி அனைத்து விக்கட்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.

இன்றைய போட்டியில் நுவன் துஷார அடுத்தடுத்து 3 விக்கட்களை கைப்பற்றியதுடன், இன்றைய போட்டியில் மொத்தமாக அவர் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களை வீழ்த்தினார்.

Related Articles

Latest Articles