நாசாவால் நடத்தப்பட்ட சித்திரப்போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கை சிறுவன்

சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மாணவன் ஒருவர் முதலிடம் பிடித்துள்ளார்.

அநுராதபுரம், திரப்பன பகுதியைச் சேர்ந்த தஹாம் லோஷித பிரேமரட்ன என்ற சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.

சிறுவயது முதலே சித்திரம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்காக இதற்கு முன்னரும் ஆக்கங்களை அனுப்பி வைத்துள்ளார்.

நாசாவினால் நடத்தப்பட்ட போட்டியில் சிறார்களுக்கான பிரிவில் முதல் இடம் பிடித்துள்ளார். நாசாவின் அடுத்த ஆண்டுக்கான நாட்காட்டியில் ஜுலை மாதத்துக்கான பகுதியில் இவரின் படம் இடம்பெற்றுள்ளது.

விண்வெளியில் வாழ்தல் மற்றும் பணி செய்தல் என்ற தொனிப்பொருளில் அவரின் ஆக்கம் அமைந்துள்ளது.

Related Articles

Latest Articles