நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள்

நாட்டில் இன்று(04) முதல் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கடந்த மாதம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, டெங்கு அச்சுறுத்தல் நிலவும் 15 மாவட்டங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்படி, 81 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் ஆரம்பமாகவுள்ள இந்த டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளன.

Related Articles

Latest Articles