நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தம் – எதிரணி போர்க்கொடி!

” நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி உடன்படவில்லை.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

” நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவது பற்றி பேச்சு இடம்பெறுகின்றது. ஜனாதிபதி உரை நிகழ்த்துவதற்காகவா அல்லது குழுக்களை கலைப்பதற்காகவா இந்த முயற்சி என தெரியவில்லை. எனினும், நாம் இதனுடன் உடன்படவில்லை.

இந்த அரசு தேர்தலுக்கு அஞ்சுகின்றது. வேட்பாளர்கள் பற்றி கருத்து மோதல் உள்ளது. எனவே, எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்ற தெளிவு இல்லை. இந்த அரசு கூறும் விடயங்களை, முன்னெடுக்கும் திட்டங்களை நம்புவதற்கு மக்கள் தயாரில்லை.” – எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற அமர்வு இம்மாத இறுதியில் இடைநிறுத்தப்படவுள்ளது என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles