நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் இரத்து!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் என்பவற்றை இரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

‘சமகால அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு முன்வைத்துள்ள “வளமான நாடு – அழகான வாழ்வு” கொள்கை பிரகடனத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிமாருக்கும் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைளை இரத்துச் செய்வதற்காகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 05 வருடங்களுக்குப் பின்னர் வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதிமாருக்கும் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைளை இரத்துச் செய்வதற்காகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்;வூதியத்தை இரத்துச் செய்வதற்கும் இயலுமாகும் வகையில்,

1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டங்களை இரத்துச் செய்வதற்காக 02 சட்டமூலங்களைத் தயாரிப்பதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” என்று குறிப்பிட்டார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles