வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தும் திட்டம் ஜனாதிபதியிடம் உள்ளது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
‘கோப்’ குழு உள்ளிட்ட முக்கியமான நாடாளுமன்ற குழுக்களின் செயற்பாடுகளை முடக்கும் நோக்கிலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன என்றும் எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டால்,
கோப், கோபா மற்றும் நிதி உள்ளிட்ட நாடாளுமன்ற குழுக்களும் கலைந்துவிடும். பின்னர் நாடாளுமன்றம் கூடும்போது அந்த குழுக்கள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.