‘நாடாளுமன்றத்தின் கௌரவத்தை காக்கவும்’ – எம்.பிக்களிடம் சபாநாயகர் கோரிக்கை

“நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலும், நிலையியற் கட்டளைகளின் பிரகாரமும் செயற்படுங்கள்.”

இவ்வாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு கூடியது. இதன்போதே சபாநாயகர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் சபைக்குள்ளும், வெளியேயும் நடந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles