நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று முழு நாள் விவாதம் நடைபெறவுள்ளது.
இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை தேசிய மக்கள் சக்தி சபையில் சமர்ப்பிக்கவுள்ளது.
அதே வேளை, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பாக ஆராயும் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு கூடுகின்றது










