நாடாளுமன்றில் அமளி – விசாரணைக்கு 7 பேரடங்கிய குழு!

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும். அதற்காக 7 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்படும். அந்த குழுவின் அறிக்கையின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு கூடியது. இதன்போது எதிர்க்கட்சியினர் சபைக்குள் கொண்டுவர முயன்ற ஆபத்தான பொருட்கள் தொடர்பில் தீவிர விசாரணை நடத்த சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன கோரினார். அத்துடன் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர்.

இதனையடுத்தே சபாநாயகர் மேற்படி அறிவிப்பை விடுத்தார்.

அதேவேளை, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பான விவாதம் தொடர்பில் சபாநாயகர் பக்கச்சார்பாக முடிவெடுத்துள்ளார் என லக் ஸ்மன் கிரியல்ல எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

Related Articles

Latest Articles