இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை நாடு திரும்பினார்.
இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பை ஏற்றே பிரதமர் அங்கு சென்றிருந்தார். முக்கியமான இராஜாதந்திர சந்திப்புகளையும் நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சிறைக்கைதிகளை மிரட்டினார் எனக்கூறப்படும் லொஹான் ரத்வத்தே விவகாரம் தொடர்பிலும் பிரதமர் முடிவெடுக்கவுள்ளார். பிரதமர் நாடு திரும்பியதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.