கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் மிரிஹானை அமைதியின்மை தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று ஸ்தாபிக்கபட்டுள்ளது.
குறித்த அமைதியின்மை சம்பவங்களின் போது முப்படையினர் செயற்ப்பட்ட விதம் குறித்து ஆராயும் வகையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அட்மிரல் வசந்த கரன்னாகொட, மார்ஷல் ரொஷான் குணதிலக்க மற்றும் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
நாடனாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது பாதுகாப்பு பரிவினர் செயற்ப்பட்ட விதம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், இவ்வாறு விசாரணை குழு அமைக்க்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.