நாட்டு மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோர வேண்டும்!

“ நாட்டில் நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தியதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும். “ – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், தற்போதைய நெருக்கடி நிலைமையை சீர்செய்ய அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று 2ஆவது நாளாகவும் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிரணி பிரதம கொறடாவான அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்ல மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டில் உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது யார்? இரசாயன உரத்துக்கு தடை விதிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தின் அனுமதி கோரப்பட்டதா?

நாட்டு மக்களுக்கு தட்டுப்பாடின்றி உணவு கிடைப்பதையும், ஆடை மற்றும் வீடு இருப்பதையும் ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் என அரசமைப்பில் கூறப்பட்டுள்ளது. அரசமைப்பை காப்பேன் என உறுதியளித்த ஜனாதிபதி, தற்போது அரசமைப்பை மீறியுள்ளார்.இ ன்று உணவுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. சீமெந்து விலை அதிகரித்துள்ளதால் வீடு கட்டமுடியவில்லை. ஆடை விலையும் 300 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகருக்கிடையில் அதிகாரங்கள் பகிரப்பட்டன. ஜனநாயகம் காக்கப்பட்டது. ஆனால் 2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டது. 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நாடாளுமன்றத்தை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பலவீனப்படுத்தினார்.

இவ்வாறு நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்திவிட்டு, இன்று நாடாளுமன்றத்திடம் தீர்வு கோருகின்றார். அவ்வாறு தீர்மானம் எடுத்தாலும் அதனை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இருக்கும்போது செயற்படுத்த முடியுமா?

எனவே, அரசமைப்பில் மாற்றம் ஒன்று அவசியம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க பொது இணக்கப்பாட்டுக்கு வருவோம். குறைந்தபட்சம் 19 ஆவது திருத்தச்சட்டத்தையாவது செயற்படுத்துவோம்.

அதேவேளை, விவசாய நிலங்களை நிறுவனங்களுக்கு வழங்கும் சட்டமூலத்தை, மக்களின் எதிர்ப்பால் பிரதமர் மோடி மீளப்பெற்றார். மக்களிடம் மன்னிப்பு கோரினார். அதன்பின்னர் தேர்தலிலும் வெற்றிபெற்றார். எனவே, இலங்கையில் நெருக்கடி நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி நாட்டு மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles