விவசாய அமைச்சின் செயலாளரை அல்ல, இந்த அரசையே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
43 ஆம் படையணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இரசாயன உரப்பயன்பாட்டுக்கு உரிய மாற்று ஏற்பாடின்றி அதனை தடைசெய்தால் பஞ்சம் ஏற்படும் என நாம் எச்சரித்திருந்தோம்.
இன்று அந்த உண்மையை விவசாய அமைச்சரின் செயலாளர் வெளிப்படுத்தினார். அதற்காக அவர் நீக்கப்பட்டுள்ளார். எனவே, வீட்டுக்கு செல்ல வேண்டியது அமைச்சின் செயலாளர்கள் அல்ல ,அரசே என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நாடு இவ்வாறு நெருக்கடியில் இருக்கையில் எல்பிஎல், கார் பந்தயம் போன்ற களியாட்டங்கள் தேவைதானா?”- என்றும் சம்பிக்க குறிப்பிட்டார்.
