எரிபொருள் தட்டுப்பாடு நிலவக் கூடும் என்ற செய்தி வெளியானதை அடுத்து எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளைக் காண முடிகிறது.
குறிப்பாக நானுஓயா, நுவரெலியா பிரதேசங்களில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது.
எரிபொருளுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் ஏற்படாது என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்துள்ளார்.
அவ்வாறு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமாயின் அதுகுறித்து அறியத்தருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி மற்றும் படங்கள் : கிருஸ்ணசாமி






