நானுஓயாவிலும் யுக்திய ஒப்பரேஷன் தீவிரமாக முன்னெடுப்பு

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு தேடுதல் வியாழக்கிழமை (28) நானுஓயா பிரதான நகரில் முன்னெடுக்கப்பட்டது

நானுஓயா பொலிஸார் இவ் சுற்றிவளைப்புக்கள் மேற்கொண்டனர் . இதன் பொது நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் செல்லும் கனரக வாகனங்களை வாகனங்களையும் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் , வாகனங்களில் அடிக்கடி சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரியும் இளைஞர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் நானுஓயா நகரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதோடு நானுஓயா புகையிரத நிலையத்திற்கு புகையிரதம் மூலம் பயணம் செய்பவர்களையும் அவர்கள் கொண்டு செல்லும் பொதிகளையும் அடிக்கடி பரிசோதனை செய்து வருகின்றனர்.

நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles