நானுஓயாவில் 25 அடி உயரம் வளர்ந்தது கோவா செடி – கேக்வெட்டி விவசாயி பூஜை

நுவரெலியா நானுஓயா உடரதல்ல தோட்டத்தில் வசிக்கும் எஸ்.சரவணபவன் என்பவரின் வீட்டு தோட்டத்தில் வளர்த்த இலை கோவா செடி 1500 நாட்கள் ஓங்கி வளர்ந்ததை முன்னிட்டு கேக் வெட்டி பூஜை செய்துள்ளார்.

தனக்கு 4 வருடங்களாக உணவளித்தமைக்காக கோவா செடிக்கு பூஜை செய்து கேக் வெட்டி கொண்டாடினார். கோவா செடி 25 அடி உயர் மரமாக வளர்ந்து பல கிளைகளை தந்து பாரிய அளவில் விளைச்சளை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சரவணபவன் கருத்து தெரிவிக்கையில்,

இந்த கோவா செடியினை 2016 ஆம் ஆண்டு தான் நாட்டினேன். வழமையாக கோவா செடியொன்று ஒரு வருட காலம் தான் பலம் தரும். ஆனால் இந்த கோவா செடியை தொடர்ந்தும் பராமரித்து வருவதால் இன்று இந்த கோவா செடி மரமாகி நான்கு வருடங்களாக பலன் தந்து கொண்டிருக்கிறது. விவசாயத்திற்கு கௌரவளிக்கும் நாட்டில் நான் பிறந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles