நானுஓயாவில் காணாமல்போன சிறுவன் நீர்கொழும்பில் மீட்பு!

நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் கடந்த 17 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த 12 வயது சிறுவன், நேற்றிரவு நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அயல் வீட்டில் உள்ள நபரொருவரே இச்சிறுவனுக்கு தொழில் பெற்றுதருவதாக ஏமாற்றி, நானுஓயாவிலிருந்து ரயில் மூலம் நீர்க்கொழும்புக்கு அனுப்பியுள்ளார் எனவும், 10 ரூபாவை அபகரித்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுவன், நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் இருப்பதை கண்ட உறவினர் ஒருவர், அவரை பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளார்.

காணாமல் போன சிறுவன் நீர்கொழும்பு பகுதியில் இருப்பதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் ஊடாக , நானுஒய பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சிறுவனை நீர்கொழும்பிற்கு அனுப்பி வைத்த சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

டி. சந்ரு

Related Articles

Latest Articles