‘நான் இறக்கவில்லை… சமாதியில் இருக்கிறேன்’- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யானந்தா

கடத்தல், பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார்.

அவர் அவுஸ்திரேலியா அருகே ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கி அதனை கைலாசா நாடு என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அந்த நாட்டுக்கென்று தனி ரூபாய் நோட்டுகள், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை வெளியிட்டார்.

இதற்கிடையே சர்வதேச பொலிஸார்  மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து அவரை தேடும் பணியில் குஜராத் மற்றும் கர்நாடகா பொலிஸ ஈடுபட்டனர்.
பொலிஸ் தேடுதலுக்கு மத்தியில் நித்யானந்தா தினந்தோறும் சமூக வலைதளத்தில் தோன்றி தனது பக்தர்கள் மத்தியில் நேரடியாக சத்சங்க உரையாற்றுவது, கலந்துரையாடுவது போன்ற வீடியோக்கள் வெளியாகின.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அவரது வீடியோக்கள் வெளியாகவில்லை. நித்யானந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தான் அவர் வீடியோக்களை வெளியிடவில்லை என தகவல்கள் வெளியாகின.

இதன் உச்சமாக ஒரு சில சமூக வலைதளங்களில் நித்யானந்தா மரணம் அடைந்துவிட்டதாக தகவல்கள் பரவியது.

இதனால் அவரது பக்தர்கள் நித்யானந்தாவுக்கு என்ன ஆனது? என அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் நித்யானந்தா தற்போது சமூக வலைதளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டதோடு சில தகவல்களையும் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் நித்யானந்தா உடல் மெலிந்து காணப்படுகிறார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

என்னை பற்றி ஹேக்கர்கள் நான் இறந்து விட்டதாக பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம். நான் சமாதியில் இருக்கிறேன். ஆனால் இறக்கவில்லை என்று என் சீடர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். என்னால் பேசவோ அல்லது சத்சங்கங்களை வழங்குவதற்கோ சக்தி வருவதற்கு இன்னும் நேரம் எடுக்கும்.

27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். மருத்துவ சிகிச்சையில் இருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. மருத்துவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்கள் என்பதைவிட என் பக்தர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை போன்றவர்கள்.

பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.

தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை. மற்றபடி, வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. உணவு உண்ண முடியவில்லை. தூங்க முடியவில்லை.

எனக்கு அறிமுகமானவர்களை கூட அடையாளம் கண்டுகொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை. சமாதி மனநிலையை அடைந்து இருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன்.

மருத்துவர்களால் எந்த நோயையும், கோளாறுகளையும் என் உடலில் இருந்து கண்டறிய முடியவில்லை. எனது இதயம் 18 வயது வாலிபரின் இதயம் போன்று துடிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். நித்ய பூஜைக்காக நான் சமாதியில் இருந்து வரும்போது மட்டும் சில சமயங்களில் உங்கள் கருத்துக்களை பார்த்து என் பதிலை தருகிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி! நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி! ஆனால் உண்மையில் எனக்கு நோயெல்லாம் ஒன்றும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles