ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
இரவு – பகல் பாராது, சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது, அங்கு தொடர்ந்தும் முகாமிட்டு, நாட்டை மீட்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் போராடிவருகின்றனர்.
இப்போராட்டத்துக்கு நாலுக்கு நாள் மக்கள் ஆதரவு வலுத்துவருகின்றது.