நாமலை ஜனாதிபதியாக்க பாடுபடுவோம்!

நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்குரிய நடவடிக்கையில் நாம் தொடர்ந்து ஈடுபடுவோம். எதிர்காலத்தில் அந்த இலக்கை அடைவோம் என்று சூளுரைத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.

அத்துடன், பஸில் ராஜபக்ச பயந்து வெளிநாடு ஓடவில்லை எனவும், அவர் நிச்சயம் நாட்டுக்கு வந்து பொதுத்தேர்தலை வழிநடத்துவார் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, அநுரகுமார திஸாநாயக்கவால் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்கள் முன்னெடுக்கப்படுமானால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் திஸ்ஸ குட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles