நாளை முதல் 42 புகையிரத சேவைகள் இரத்து

நாளை (12) முதல் மறு அறிவித்தல் வரை 42 ரயில் பயணங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்களை இயக்க போதிய பணியாளர்கள் இல்லாமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பிரதான பாதையில் 20 ரயில் பயணங்களும், புத்தளம் பாதையில் 04 பயணங்களும், களனிவெளி பாதையில் 02 ரயில் பயணங்களும், கடலோர ரயில் பாதையில் 16 ரயில் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles