நாவலப்பிட்டியவில் மலர்ந்தது மொட்டு – சபையை இழந்தது ஐ.தே.க.

ஐக்கிய தேசியக்கட்சி வசமிருந்த நாவலப்பிட்டிய நகரசபையின் ஆட்சி அதிகாரத்தை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது.

நாவலப்பிட்டிய நகரசபையின் தவிசாளராக இருந்தவர் சஜித் அணியில் இணைந்து விட்டதால் அவரின் பதவியை ஐக்கிய தேசியக்கட்சி பறித்தது. இதனால் தவிசாளர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

அவ்விடத்துக்கு புதியவரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று மாகாண ஆணையாளரின் கண்காணிப்பின்கீழ் நடைபெற்றது. இதில் மொட்டு கட்சி உறுப்பினரான அமல் பிரியங்க வெற்றிபெற்றார். இவர் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் சகா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles