” உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கான நிதியை 7 நாட்களுக்குள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதி அமைச்சின் செயலாளர் வழங்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் அவருக்கு எதிராக எதிரணிகள் கூட்டாக இணைந்து சட்ட நடவடிக்கை எடுக்கும்.”
இவ்வாறு சட்டத்துறை பேராசிரியரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார்.
” உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணிக்கும் வகையில் அரசு செயற்படுகின்றது.
நிதி அமைச்சின் செயலாளருக்கு நாம் 7 நாட்கள் கெடு விதிக்கின்றோம். அதற்குள் பணம் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து திறைசேரியின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும்.” – எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.










