“ இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர வேண்டும். அந்த முறைமையை நீக்குவதற்கு ஆதரவளிக்கப்போவதில்லை.” – என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ எமது நாட்டின் தற்போதைய நிலைமை, பிரச்சினை, கடந்தகால சம்பவங்கள் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீடிக்கப்பட வேண்டும். ஆனால் சிறந்த ஆளுமைவுள்ள தகுதியான ஒருவரே அப்பதவிக்கு வர வேண்டும். அதனால்தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறினேன்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கு கோட்டாபய ராஜபக்ச முயற்சித்தபோதும் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். எனவே, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் கைவைக்கும் முயற்சிக்கு ஆதரவாக நான் கை உயர்த்தப்போவதில்லை.” – என்றார்.
