நிலநடுக்கத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்ட தாயுடன் இணைந்த துருக்கி குழந்தை

உலகை உலுக்கிய துருக்கி நிலநடுக்க கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட அதிசய குழந்தை, இறந்து விட்டதாக கருதப்பட்ட தாயுடன் மீண்டும் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் தென் – மத்திய துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் ரிக்டர் அளவு கோலில் 7.8 என்ற அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தின் ஏற்ற்பட்டு 128 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு படையினர், கட்டட இடிபாடுகளில் இருந்து ஆயா (Aya) என்ற இரண்டு மாத குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.

இடிபாடுகளில் சிக்கி 128 மணி நேரத்திற்கு பிறகும், குழந்தை உயிருடன் இருப்பதை பார்த்தவர்கள், அக் குழந்தையை கடவுளின் அடையாளம் என்று வாழ்த்தினர்.

எனினும் நிலநடுக்க கட்டட இடிபாடுகளில் சிக்கி குழந்தையின் தாய் இறந்ததாக வெளியான செய்திகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் 54 நாட்களுக்கு பின் இறந்து விட்டதாக கருதப்பட்ட தாயுடன், நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த அதிசய குழந்தை மீண்டும் இணைந்துள்ளது.

தாயும், குழந்தையும் 54 நாட்களுக்கு பின்ன இணையும் அந்த தருணத்தை துருக்கியின் குடும்பம் மற்றும் சமூக சேவைகளுக்கான அமைச்சர் டெரியா யானிக் ட்வீட்டரில் பகிர்ந்துள்ள நிலையில் இத்தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Related Articles

Latest Articles