” கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதால், தொற்றாளர்களை அடையாளம் காணும்வரையாவது முழு நாட்டையும் முடக்கவேண்டும்.” – என்று பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.
” நாட்டில் அச்சுறுத்தலான நிலைமையே காணப்படுகின்றது. இதனை உரிய வகையில் முகாமை செய்யாவிட்டால் எல்லாம் கைமீறி சென்றுவிடும். இந்நியாவின் நிலைமை இங்கு உருவாகிவிடும். எனவேதான் நாட்டை முடக்குமாறு கோருகின்றோம்.
அதேவேளை, பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும். சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றவேண்டும். அவ்வாறு செய்தால் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். அரசும் உடன் கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்கவேண்டும் எனவும் அவர் கூறினார்.
