நீதி கோரி யாழ். வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம்

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி , யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று முற்பகல் 9.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள், தமக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தினர்.

சம்பந்தப்பட்ட தாதியை பணி நீக்கம் செய், பணிப்பாளரே விசாரணைகளை மூடி மறைக்காதே உள்ளிட்ட கோஷங்கள் இதன்போது எழுப்பபட்டன.

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மகஜரொன்றை கையளிப்பதற்கு பொதுமக்களிடமும் கையெழுத்து சேகரிப்பு இடம்பெற்றுவருகிறது.

Related Articles

Latest Articles