நீதிமன்ற உத்தரவுக்கமைய எரிவாயு விநியோகிக்கப்படும்-லிட்ரோ உறுதி

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ப்ரோப்பேன் அளவு 30 சதவீதமாகவும், பியூட்டேனின் அளவு 70 சதவீதமாகவும் கொண்ட, சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று(20) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற லிட்ரோ நிறுவனத்தின் தலைவர், இதனை தெரிவித்துள்ளார்.

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் எரிவாயுவுடன் தொடர்புடைய 847 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஆண்டு எரிவாயுவுடன் தொடர்புடைய 31 வெடிப்பு சம்பவங்களும், 2019ஆம் ஆண்டு 18 வெடிப்பு சம்பவங்களும் பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டு எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles