நீரில் மூழ்கி சிறுவன் பலி! நமுனுகுலவில் சோகம்!!

நமுனுகுல – புடவத்த பகுதியில் பொத்குல் ஓயாவில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை அலியாவத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நமுனுகுல புடாவத்தையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்ததாகவும், மேலும் இரு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது ஆழமான குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நமுனுகுல பொலிஸார் முன்னெடுப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles