பதுளை ஹெலி-எல பகுதியிலுள்ள ரிலா எல்ல நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்ற இரு இளைஞர்கள், நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியிலிருந்து தவறி விழுந்து பலியாகியுள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்றுள்ள இவ்வனர்த்தத்தில் வீரகெட்டிய, தெஹியத்தகண்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 36 வயதுகளுடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ரிலா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகே நேற்றிரவு நான்கு இளைஞர்கள் மது அருந்தியுள்ளனர்.இதனையடுத்து குறித்த இரு இளைஞர்களும் மதுபோதையில் நீர்வீழ்ச்சியை காணச்சென்றுள்ளனர். அதன்போது நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியிலிருந்து சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










