” அரசாங்கத்துக்குள் எவ்வித குழப்பமும் இல்லை. 2030 ஜனாதிபதி தேர்தலையும் தேசிய மக்கள் சக்தியாகவே எதிர்கொள்வோம்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்திக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜே.வி.பியின் முயற்சியால்தான் தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. வெளியாகும் தகவல்களின்படி தேசிய மக்கள் சக்திக்குள் எவ்வித முரண்பாடும் கிடையாது. அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்த தரப்புகளே இப்படியான கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிடுகின்றன. அவர்களின் பகல் கனவு ஒருபோதும் நனவாகாது.
தேசிய மக்கள் சக்தி மேலும் வலுப்படுத்தப்படும். 2030 தேர்தலைக்கூட தேசிய மக்கள் சக்தியாகவே எதிர்கொள்வோம்.” – என்றார்.










