நுவரெலியா உட்பட 19 மாவட்டங்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் என்று பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 130 ஆசனங்களுக்குமேல் எமது அணி கைப்பற்றும். 150 தான் எமது இலக்காக இருக்கின்றது. அதற்கான பேராதரவை மக்கள் வழங்குவார்கள் என நம்புகின்றோம்.
யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களே எமக்கு சவால்மிக்க தேர்தல் களம். மற்றும்படி ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களிலும் வெற்றி உறுதி.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.