நுவரெலியாவில் இதுவரை 2,080 பேருக்கு கொரோனா – 1,658 பேர் மீண்டனர் – 15 பேர் பலி

நுவரெலியா மாவட்ட த்தில் கொவிட் 19 கொரோனா தொற்று ஆரம்பமான 2020 மார்ச்சி மாதம் முதல் 2021 மே மாதம் 5 ஆம் திகதி வரை 24, 308 பேருக்கு பி. சி. ஆர் பரிசோதணை செய்தலில் 2,080 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது.

அதில் 1,658 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.422 கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை இதுவரை கொரோனா தொற்றினால் நுவரெலியா மாவட்டத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

நுவரெலியா பிரதேசத்தில் ஐந்து பேரும் அம்பகமுவ பிதேசத்தில் நான்கு பேரும் வலப்பனை பிரதேசத்தில் மூன்று பேரும் அங்குராங்கெத்தை பிரதேசத்தில் இரண்டு பேரும் கொத்மலை பிரதேசத்தில் ஒருவருமாக மொத்தம்15 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட மேற்படி தகவல்களை வெளியிட்டார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போது நுவரெலியா மாவட்டத்தில் பரவி வரும் கொரோனா தொற்று தொடர்பாக விளக்கமளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

” நுவரெலியாமாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட ஐந்து பிரதேச செயலகங்களான நுவரெலியா அம்பகமுவ கொத்மலை வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய பிரதேசங்களில் 422 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் வசந்த காலத்தில் 20 ஆம் திகதிக்கு பின் நுவரெலியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ளனர் . எனவும் கடந்த 24 மணித்தியாலய காலப்பகுதியில் மாத்திரம் 78 பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டு சிகிச்சை முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை 2080 தொற்றாளர்கள இனம் காணப்பட்டுள்ளதுடன் இதில் நுவரெலியா பிரதேசத்தில் 870 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இம்மாவட்டத்தில் நுவரெலியாவில் அதிக தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஹங்குராங்கெத்தையில் 483 தொற்றாளர்களும் இகொத்மலையில் 296 தொற்றாளர்களும்இ அம்பகமுவ பிரதேசத்தில் 237 தொற்றாளர்களும்இ ஆக குறைந்த தொற்றாளர்களாக வலப்பனை யில் 194 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது அம்பகமுவ பிரதேசத்தில் உள்ள இஞ்ஜஸ்ட்றீ மற்றும் போடைஸ் பிலிங்க் போனி பீரட் பாத்போட் போடைஸ் போடைஸ் நிசி டிவிசன் புளியாவத்தை நகரம் புளியாவத்தை மேற்பிரிவு கீழ்பிரிவு ஆகிய பகுதிகளில் சுமார் 6700 பேர் முடக்கப்பட்டுள்ளதுடன் இது தவிர ஹங்குராங்கெத்தையில் ரத்மெட்டிய கிராம சேவகர் பிரிவும் வலப்பனையில் நில்தண்டாஹின்ன கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தற்பொழுது வீடுகளில் தனிமைபடுத்தியுள்ள குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நுவரெலியா பிரதேசத்தில் 500 குடும்பங்களுக்கும் அம்பகமுவ பிரதேசத்தில் 350 குடும்பங்களுக்கும் ஹங்குராங்கெத்த பிரதேசத்தில் 350 குடும்பங்களுக்கும் வலப்பனை பிரதேசத்தில் 200 குடும்பங்களுக்கும் கொத்மலை பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்குமாக 1500 குடும்பங்களுக்கு இவ் உணவு பொதிகள் வழங்கப்படும்.

மேலும் தொற்றுக்கு உள்ளானவர்களை தனிமைப் படுத்துவதற்காக நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை ஹங்குராங்கெத்த பொகவந்தலாவை ஆகிய பிரதேசங்களில் தனிமைப் படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளி நாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்த பத்தனை ஸ்ரீபாத கல்லூரியிலும் ஒரு முகாம் இயங்குவதாகவும் மேலும் அம்பேவல பிரதேசத்தில் கந்தேஎல்ல பகுதியில் இயங்கிவரும் இளைஞர் முகாமிலும் தனிமைப்படுத்தல் முகாமாக இராணுவத்தின் உதவியுடன் மாற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles