நுவரெலியா பிரதான நகரில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகார பணிமனையின் ஒளடதங்கள் அதிகாரசபையின் பரிசோதகர்கள் இணைந்து நேற்று (06) திங்கட்கிழமை இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைய சட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகள் விநியோகம் தொடர்பில் மருந்தக விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான (74 )வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதே நேரம் மருந்தகத்தில் மறைத்து வைத்திருந்த நிலையில் சிறு தொகை சட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்று (07) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.










